Thursday, September 13, 2012

பூண்டி மாதா (சிறுகதை)

அவள் மனது  ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத பழைய சிந்தனைகளை உமிழ்ந்துகொண்டிருந்தது, கண்களோ மனதில் தேங்கிக்கிடந்த சுமையையும்  வலியையும் கண்ணீராக நன்றி வார்த்துக்கொண்டிருந்ததுஇதுவும் கடந்து போகும் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்ததுசுற்றுபுறத்தில் எழும்பிய எந்த ஒலி மாசுபாடும் அவள் காதுகளில் விழவில்லை. கண்களோ வழிக்கப்பட்ட தலையில்  நீளமான தழும்போடு வலியின் கவலை சிறிதும் இல்லாமல் தவழ்ந்து விளையாடும் தன் ஒன்றரை வயது கௌதமனை ஆனந்தத்தோடு பின்தொடர்ந்தது.

காதலித்து கைப்பிடித்த அன்பனை ராணுவம் வெற்றுஉடலாக வீட்டில் கிடத்திய போதே அவள் பாதி இறந்து விட்டிருந்தாள்தன் மகனுக்கு முளைகட்டி என்று தெரிந்த போது மீதி உயிரும் அவளை விட்டு போயிருந்ததுராணுவ உதவியுடன் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடாயிருந்தாலும், இந்த சிறு உடம்பு இதை தங்குமா என்று மருத்துவர்களே நம்பிக்கையற்று இருந்தார்கள்அவளுக்கோ வாழ்க்கையின் ஒரே பிடிப்பு, ஒரு முதியவர் முலமாக இந்த இடம் பற்றியும் அற்புதங்கள் பற்றியும் தெரிய வந்ததுஅவளுக்கு தன் மகனை மீட்டு கொண்டு வர கடவுள்களின் நம்பிக்கையும், உதவியும் தேவையாய் இருந்தது.

இப்போது கண்களில் ஆனந்தக்கண்ணீரோடு கடவுளின் காலடியில், தன் மகனின் தலை தழும்பினை பாசத்தோடு தடவி கொடுத்தாள்.  ' நாம போயிடலாம் அம்மா', டிரைவரின் குரல் லேசாக கேட்டதுமகனை மார்போடு வாரி அணைத்தபடி கோவிலை விட்டு வெளியேறினாள்.

"சொத்" என்று ஒரு கல் அவள் மகனின் தலையை தாக்கியது, அவள் முகம் எங்கும் ரத்தம்சுற்றிலும் '.... ' என்று அலறல்.   'சிங்களனே வெளியேறு" என்ற கூச்சலுடன்.

-JR -